முதல் பக்கம்

ஹிஜ்ரி காலண்டர்

வீடியோ பதிவுகள்

கட்டுரைகள்

வரலாறு

இஸ்லாம்

தமிழ் குர்ஆன்

   

 

Go To Index      

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 39

யூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்.


ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction Day) பிறை பிறந்து அதற்கு அடுத்த நாளான புதிய மாதத்தின் முதல் நாளில் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் அது மறையும் போதுதான் புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும் என்பதை தெரிந்து கொண்டோம். இருப்பினும் அந்த முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு, மாதத்தின் இரண்டாவது நாளை முதல்நாளாகக் கொள்ளும் இந்தப் பழக்கம் யூதர்களின் வழிமுறையிலிருந்து பிறந்ததாகும். யூதர்கள்தான் தங்களுடைய ஹீப்ரு காலண்டரின்படி ஒருநாளின் துவக்கத்தை சூரியன் மறைந்த பின்னர் மஃரிபு வேளையிலிருந்து ஆரம்பிக்கின்றனர். அதுபோல முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் முதல் தங்கள் மாதத்தைத் துவங்குகின்றனர். இதற்கான சுருக்கமான ஆதாரங்களை கீழ்க்கண்ட தரவுகள் மூலம் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

And it was evening and it was morning, one day (Genesis 1:5). It says God called the light "day," and the darkness he called "night." Thus evening came, and morning followed-- the first day.

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பெயரிட்டார்;. சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் (1:5)

Jewish Calendar Date : When God created time, He first created night and then day. Therefore, a Jewish calendar date begins with the night beforehand. While a day in the secular calendar begins and ends at midnight, a Jewish day goes from nightfall to nightfall. Shabbat begins on Friday night..(www.chabad.org)

யூத நாட்காட்டியின் தேதி :
கடவுள் காலத்தை உருவாக்கிய போது, அவர் முதலில் இரவை படைத்தார் பின்னர் பகலை உருவாக்கினார். எனவே, ஒரு யூத காலண்டரில் தேதி இரவிலிருந்து தொடங்குகிறது. மதச்சார்பற்ற நாட்காட்டியில் (ஆங்கில நாட்காட்டி) ஒரு நாள் என்பது நள்ளிரவில் துவங்கி, நள்ளிரவில் முடிவடைகிறது. இருப்பினும் யூதர்களின் ஒரு நாள் என்பது பொழுது சாய்ந்ததிலிருந்து (மஃரிபிலிருந்து) துவங்கி, அடுத்த பொழுது சாயும்வரை (மஃரிபு) ஆகும். சபாத் (எனும் யூதர்களின் புனித நாள் சனிக்கிழமை) வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடங்குகிறது..(www.chabad.org)

All Jewish holidays begin the evening before the date specified on most calendars. This is because a Jewish "day" begins and ends at sunset, rather than at midnight. If you read the story of creation in Genesis Ch. 1, you will notice that it says, "And there was evening, and there was morning, one day." From this, we infer that a day begins with evening, that is, sunset. Holidays end at nightfall of the date specified on most calendars; that is, at the time when it becomes dark out, about an hour after sunset. (www.jewfaq.org)

அனைத்து யூத விடுமுறை நாட்களும், காலண்டர்களில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் மாலையிலிருந்து ஆரம்பிக்கின்றன. இதற்குக் காரணம் என்னவெனில், யூதர்களின் ஒருநாள் என்பது சூரியன் மறையும் நேரத்திலிருந்து துவங்கி சூரியன் மறையும் போது முடிவடைகிறது, மாறாக நள்ளிரவில் அல்ல. பைபிலின் ஆதியாகமம் 1-வது அதிகாரத்தில் படைப்பின் கதையைப் பற்றி 'சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று' என்றே நீங்கள் படிப்பீர்கள். இதிலிருந்து நாம் ஒரு நாள் என்பது சூரியன் மறையும் மாலை நேரத்திலிருந்து துவங்குகிறது என்கிறோம். விடுமுறை நாட்கள் காலண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின் இரவோடு (பொழுது சாய்ந்ததும்) முடிவடைகிறது. அதாவது அது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் என்ற அளவில் இருள் சூழும் அந்த நேரம் ஆகும். (www.jewfaq.org)

Shabbat is observed from a few minutes before sunset on Friday evening until the appearance of three stars in the sky on Saturday night. (wikipedia.org)

சபாத் (யூதர்களின் புனித நாள்) வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையும் முன் ஒரு சில நிமிடங்களிலிருந்து அனுசரிக்கப்படுகிறது. அதாவது அது சனிக்கிழமை இரவு வானில் மூன்று நட்சத்திரங்கள் தோன்றும் வரையுள்ள நேரமாகும். (wikipedia.org)

The first time that the waxing crescent of the Moon is visible (from Jerusalem) marks the begining of a Jewish month, called Rosh Chodesh ("head of the month"). As soon as the new moon was visible as a waxing crescent, the Sanhedrin (The Supreme Rabbinical Court) in Israel was informed and Rosh Chodesh was formally announced. The Day after new moon was sighted was a festival, heralded with sounding of shofar and commemorated with convocations and sacrifices. (www.hebrew4christians.com)

ரோஷ் சோடஸ் (தலைமாதம்) எனும் யூதர்களின் மாதப்பிறப்பானது, தலைப்பிறை என்ற சந்திரனின் முதல் வளர்பிறை (ஜெரூஸசலமில்) பார்க்கப்படுவதிலிருந்து துவங்குகிறது. தலைப்பிறை தென்பட்டவுடன், இஸ்ரேலின் அறிஞர் பேரவை (யூதமுரப்பிகளின் உச்ச நீதிமன்றம்) மூலம் தகவல் அளிக்கப்பட்டு யூதர்களின் மாதப்பிறப்பு (ரோஷ் சோடஸ்) முறையாக அறிவிக்கப்படும். தலைப்பிறையைப் பார்த்த பின்னர் அதற்கு அடுத்தநாளே திருவிழா தினமாகும். அந்நாளில் கட்டியங்கூறி கனிமொழி யுரைத்தலும், வழியனுப்பு விழாக்களும், அறுத்துப் பலியிடலும் நிகழும். (www.hebrew4christians.com)

திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் படி முஸ்லிம்கள் தங்களுடைய நாளை ஃபஜ்ரு வேளையிலிருந்து துவங்க வேண்டும். இதற்கான குர்ஆன், சுன்னாவின் தெளிவான ஆதாரங்களை வழங்கி பலமுறை மக்களுக்கு நாம் விளக்கி விட்டோம்.
'ஒரு நாளின் துவக்கம் எது? ஃபஜ்ரா? மஃரிபா?' என்ற ஹிஜ்ரிகமிட்டியின் பதிவுகளையும், ஆக்கங்களையும் அவசியம் படியுங்கள் (www.mooncalendar.in). இஸ்லாமிய மார்க்கத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பரம விரோதிகளான யூத, நஸாராக்கள் இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் செய்யத் துணிந்த குழப்பங்களை நாம் விளக்கித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை.

முஸ்லிம்களின் மானம், உயிர், உடைமைகளைத் தொடர்ந்து சூறையாடிக் கொண்டிருக்கும் அத்தகைய யூதர்களுக்கு மாறு செய்ய வேண்டியது நமது கடமையாகும். அந்த யூதர்களைப் போல இன்றைய முஸ்லிம்களும் ஒருநாள் என்பது மஃரிபிலிருந்தே ஆரம்பமாகின்றது என்று தவறாக விளங்கியுள்ளனர். அதுதான் சரி என்றும் நம்புகின்றனர். மறுமைநாள் நெருங்கும் வேளையில் முஸ்லிம்கள் யூத கிருஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு-ஜான் முழத்திற்கு-முழம் பின்பற்றத் துவங்குவார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை இத்தருணத்தில் மனதில் கொள்ள வேண்டுகிறோம். எனவே உலக முஸ்லிம்கள் அனைவரும் தங்களது அன்றாடக் கிழமையை ஃபஜ்ரு வேளையிலிருந்து துவங்கி யூதர்களுக்கு மாறு செய்ய வேண்டுகிறோம். அதுபோல குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த துல்லியமான இஸ்லாமிய ஹஜ்ரி நாட்காட்டியைப் பின்பற்றி யூத, நஸாராக்களுக்கு மாறு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

حَدَّثَنِى سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ حَدَّثَنِى زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لَتَتَّبِعُنَّ سَنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ دَخَلُوا فِى جُحْرِ ضَبٍّ لاَتَّبَعْتُمُوهُمْ ». قُلْنَا يَا رَسُولَ اللَّهِ آلْيَهُودَ وَالنَّصَارَى قَالَ « فَمَنْ ». صحيح مسلم - (8 / 57) 6952 –

நீங்கள்; உங்கள் முன்சென்றவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யூதர்களும், நஸாராக்களுமா என்று நாம் கேட்டோம்? அதற்கு அவர்களல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும். என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். நூல்: முஸ்லிம் 6952


யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழி - அதுவே நேர்வழி என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (அல்குர்ஆன் 2:120)

மேற்கண்ட எச்சரிக்கையை உணராத ஷியாக்கள் யூதர்களின் சூழ்ச்சியில் வீழ்ந்தது வரலாறு. அதன் காரணமாக இஸ்லாமிய மார்க்கத்தில் பல்வேறு குழப்பங்களை ஷியாக்கள் உண்டாக்கினர். அத்தகைய குழப்பங்களில் ஒன்றுதான் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்த பிறகே முதல் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்பதும், பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்தபிறகே பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பன போன்ற பித்அத்துகளுமாகும். ஃபத்ஹூல்பாரியில் இடம்பெறும் நீளமான அந்த வரலாற்றுச் சுவடின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

فتح الباري-إبن حجر- (4/ 121(.

1807 -  (قوله: "لا تصوموا حتى تروا الهلال" ظاهره إيجاب الصوم حين الرؤية متى وجدت ليلا أو نهارا لكنه محمول على صوم اليوم المستقبل وبعض العلماء فرق بين ما قبل الزوال أو بعد، وخالف الشيعة الإجماع فأوجبوه مطلقا، وهو ظاهر في النهى عن ابتداء صوم رمضان قبل رؤية الهلال فيدخل فيه صورة الغيم وغيرها ولو وقع الاقتصار على هذه الجملة لكفى ذلك لمن تمسك به لكن اللفظ الذي رواه أكثر الرواة أوقع للمخالف شبهة ....

 

அன்றைய சுன்னவல்ஜமாஅத் அறிஞர்கள் ஷியாக்களின் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தனர். இவ்வாறு பிறந்த பிறையை பார்த்துவிட்டு சுன்னவல்ஜமாஅத் அறிஞர்கள் அமல் செய்வதில்லை என்று அன்றைய காலத்து ஷியாக்கள் 'லாத்தஸூமூ' என்னும் மேற்காணும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டியே சுன்னவல்ஜமாஅத் அறிஞர்களுக்கு எதிராக வாதிட்டனர்.

ஒரு நாளை ஜவ்வால் என்னும் நண்பகலிலிருந்து கணக்கிடுவதா, அதன்பின்னர் கணக்கிடுவதா என்றதொரு பிரச்சனையை சுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்களுக்கு எதிராகக் கிளப்பினர். இன்று மக்களிடையே புரையோடிப் போய்விட்ட மஃரிபுக்குப் பின்னர்தான் ஒருநாளைத் துவங்க வேண்டும் என்ற யூதர்களின் வழிமுறையை ஷியாக்கள் நடைமுறைக்குக் கொண்டுவர எடுத்த முயற்சிகளை அன்றைய ஷியா எதிர்ப்பு சுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்களின் (இஜ்மா) ஆலோசனை முடிவின்படி நிராகரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஃபத்ஹூல்பாரியின் ஆதாரத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

குறிப்பாக நாட்காட்டியைக் கட்டமைக்கும் விஷயத்திலும், பூமியின் தினம் கிழமைகள் மாறும் நிகழ்விலும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது என்பதில் மேற்படி இஸ்லாமிய விரோத சக்திகள் திட்டமிட்டு செயலாற்றி வந்துள்ளதை நாம் அறிவோம்.

ஒருநாள் (Day) என்பது எங்கு மாறுகின்றது? என்பதை நாம் அறிந்து கொள்ள வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையும், வெள்ளிக்கிழமையின் ஜும்ஆ தொழுகையும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி எவ்விடத்தில் மாற்றப்படுகிறதோ, அவ்விடத்தில்தான் நாட்களும், கிழமைகளும் மாறுகின்றது என்பதை நமது மார்க்க அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ளலாம். ஜூம்ஆ தொழுகை அல்லாத மற்ற தொழுகைகளை வைத்தோ, முஸ்லிம்களின் பிற வணக்கங்களை வைத்தோ கிழமை மாற்றத்தை நாம் அறிந்து கொள்ள இயலாது.

இவ்வாறு கிழமைகள் மாறும் இடத்திற்கு நிரூபிக்கப்பட்ட பூமியின் நிலவியல் விஞ்ஞானம் (Earth Geographical Science) சான்று பகர்கின்றது. அந்த இடம் பசிபிக் பெருங்கடலில் உலகத் தேதிக்கோடு (International Dateline-IDL) என்று கூறப்படும் இடத்தில் இருப்பதை அறிய முடிகின்றது.

புரியும்படி சொன்னால், அமெரிக்கன்சமோவா மற்றும் ஃபிஜி தீவுகளின் பகுதிகளை இந்த சர்வதேசத்தேதிக் கோடு பிரிக்கிறது. ஃபிஜியைவிட சுமார் 23 மணிநேரங்கள் பின்தங்கியிருக்கும் அமெரிக்கன்சமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், பிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையிலும் இருக்கும் வேளையில், நண்பகலின் ஒரே சூரியனுக்குக்கீழ் இருப்பர். அந்த ஒரே சூரியனை அவ்விரு நாட்டு மக்களும் பார்த்தவர்களாக இருப்பர்.

அவ்வாறு அந்த ஒரே சூரியனுக்குக்கீழ் இருந்தாலும், அமெரிக்கன்சமோவா நாட்டு முஸ்லிம்கள் வியாழக்கிழமையின் நான்கு ரத்அத்துக்கள் கொண்ட லுஹர் தொழுகையை தொழவேண்டும். அதேவேளை ஃபிஜி நாட்டு முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையின் இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட ஜூம்ஆ தொழுகையைத் தொழவேண்டும். இதுதான் கடமையான தொழுகையின் சட்டமாகும்.


பின்னர் 23 மணிநேரங்கள் கழித்து அமெரிக்கன்சமோவா நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆவின் வக்து வரும் வேளையில், அவர்களும் ஃபிஜி நாட்டு மக்கள் தொழுததைப்போல இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையைத் தொழுவார்கள். அப்போது ஃபிஜி நாட்டு மக்களோ சனிக்கிழமையின் லுஹர் தொழுகையைத் தொழுது கொண்டிருப்பார்கள்.
அந்த இடத்தில் கோடு போடாமலேயே கோடு போடப்பட்டதாக கூறுவதும், உலகப்படங்களில் கோடு போட்டு காட்டுவதும் கற்பனையே. இருப்பினும், நமது இஸ்லாம் கூறும் வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையும், லுஹர் தொழுகையும் அருகருகே நடைபெறும் பகுதியாக அந்த இடமே உள்ளதை யாரும் மறுக்கவே இயலாது.

மேற்படி கிழமைமாற்ற நிகழ்வின் மூலம் முஸ்லிம்கள் தொழுகை விஷயங்களை உலக மக்கள் அறிந்து இஸ்லாம் கூறும் பூமியின் நிலவியல் விஞ்ஞானத்தை அறிந்து விடக்கூடாது என்பதற்காக உலகத் தேதிக்கோட்டை (International Dateline-IDL) மாற்றம் செய்யும் முயற்சியிலும் யூதர்கள் முனைப்போடு செயல்படுகின்றனர்.

'ஒரு நாள் என்பதை எங்கிருந்து துவங்கலாம் என்பதில் யூத அறிஞர்களிடையே கருத்து மோதல்கள் உள்ளன. சர்வதேசத் தேதிக் கோட்டுப்பகுதியை தவிர்த்து விட்டு அவர்கள் புனித பூமியாகக் கருதும் ஜெரூசலத்தை பிரதான தீர்க்கைரேகையாக (Prime Meridian) அறிவித்து அலாஸ்கா நாட்டின் கிழக்குப் பகுதியை எதிர் தீர்க்கரேகையாக (Anti Meridian) அமைக்க வேண்டும் என்று கருத்தும் நிலவுகிறது'. (Courtesy : Wikipedia)

உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் (International Dateline-IDL) தினமும் சூரியன் 90 டிகிரி கோணத்தில் உச்சியில் வரும்போது ஒரு நாளை அளவிட்டு கணக்கிட்டு வருகின்றோம். அவ்வாறு சூரியன் 90 டிகிரி கோணத்தில் உலகத் தேதிக்கோட்டிற்கு உச்சத்தில் வரும்போது நமக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கிப்லாவில் (கஃபாவில்), பழைய கிழமை மாற்றப்பட்டு புதிய கிழமை குறிக்கப்பட வேண்டும். நாள் மாறும்போது கிழமையும் மாறவேண்டும். இந்நிகழ்வு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்று கொண்டே இருக்க வேண்டும். அப்படி தினமும் மாறிக்கொண்டிருக்கும் கிழமைகளுக்கான தேதிகளை சந்திரனின் படித்தரங்கள் அறிவித்துக் கொண்டே இருக்கும்.

உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் சூரியன் 90 டிகிரி கோணத்தில் உச்சியில் இருக்கும்போது, தற்போது உலகில் பயன்படுத்தப்படும் கடிகார நேர அளவுப்படி இந்தியா உள்நாட்டு நேரம் (IST-India Standard Time) அதிகாலை 5:30 மணியிலும், சவூதி அரேபியா உள்நாட்டு நேரம் (AST-Arabia Standard Time) நள்ளிரவு (தஹஜ்ஜத்) 3.00 மணியிலும் இருக்கும். அதுபோல் உலகில் ஒவ்வொரு பகுதியும் உள்நாட்டு நேரங்களின்படி ஒவ்வொரு நேர அளவில் இருக்கும்.

இன்று நஸாராக்கள் அவர்களுடைய கிப்லாவாக (Prime Meridian) லண்டன் கிரீன்விச் பகுதியை வைத்திருப்பதால் உலகத் தேதிக்கோடு பகுதி 90 டிகிரி சூரிய உச்சத்தில் இருக்கும் போது அந்த லண்டன் கிரீன்விச் பகுதியானது உள்நாட்டு நேரம் இரவு 12 மணியாக இருக்கும். எனவே இஸ்லாத்தை எதிர்ப்போர் அவர்களுடைய கிப்லாவாக (Prime Meridian) லண்டன் கிரீன்விச் பகுதியை மையப்படுத்தி, அவர்களுடைய கிரிகோரியன் நாட்காட்டியின் அடிப்படையில் இரவு 12 மணிக்கு தேதியையும் கிழமையையும் மாற்றி வருவதைப் பார்க்கலாம்.

ஹூப்ரு நாட்காட்டி (Hebrew Calendar) அல்லது யூத நாட்காட்டி யூதர்களால் சமய சடங்குகளுக்காக பயன்படுத்தப்படும் ஓர் சூரியசந்திர நாட்காட்டி ஆகும். அண்மைய காலங்களில் சில கிறிஸ்துவர்களும் இதனை பாஸ்கா விழாவை குறிக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்நாட்காட்டி முதன்மையாக சமய சடங்குகளுக்கே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இஸ்ரேலில் யூத விவசாயிகளால் விவசாய கால கணிப்பிற்கும் இது பயன்படுகின்றது. யூத நாட்காட்டியில் 29 அல்லது 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் உள்ளன. மற்றும் சூரிய நாட்காட்டியுடன் ஒருங்கிணைக்க பத்தொன்பது ஆண்டுகளில் ஏழுமுறை ஓர் இடைச்செருகல் மாதம் (Intercalary) சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் புதிய மாதம் துவங்கும். (Courtesy : Wikipedia)

இன்னும் உலகத் தேதிக்கோடு முஸ்லிம்களால்தான் உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டது என்பதையும், முஸ்லிம்களின் இறைவணக்கமான தொழுகையையும், முஸ்லிம்களின் கிப்லாவையும் மையப்படுத்தியே கிழமை மாற்றம் நடைபெறுவதையும் மறைத்து வரலாறுகளில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து விட்டனர்.

கடந்த 1995 ஆம் ஆண்டில் சர்வதேசத் தேதிக் கோட்டிற்கு அருகாமையிலுள்ள கிரிபாட்டி தீவுகளில் (Kiribati Islands) சிலவற்றை சர்வதேசத் தேதிக் கோட்டைத் தாண்டி கிழக்குப் பகுதிக்கு முன்னதாக செல்லும்படி மாற்றியமைக்கப் பட்டது. காரணம் கடந்த 2000-ஆம் ஆண்டு (Millennium) துவக்க நாளின் சூரியன் எங்கள் நாட்டில்தான் முதலில் உதிக்கிறது என்று கூறி சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக இதைச் செய்தார்களாம். இந்த பெயரில் கிரிபாட்டி தீவுகளை 24 மணிநேரங்கள் அளவுள்ள (ஒருநாள்) வித்தியாசத்தில் இடமாற்றம் செய்து விட்டனர்.
இதனால் பிற மதத்தினர்களுக்கு வழிபாட்டு ரீதியான பாதிப்புகள் இல்லை. ஆனால் முஸ்லிம்களுக்குப் பாதிப்புகள் இருக்கின்றன. காரணம் அங்குள்ள முஸ்லிம்கள் வியாழக்கிழமை அன்று வெள்ளிக்கிழமை என்று கருதி ஜூம்ஆ தொழுகையை தொழும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய குழப்பத்திற்கு யார் காரணம்? தீர்வு என்ன? என்பதைக் கூட சித்திக்காமல் இந்த முஸ்லிம் உம்மத் பராமுகமாகவே உள்ளது.

இவ்வாறு இஸ்லாத்தை வெறுப்போர் குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டுதல்கள், கட்டளைகள் மற்றும் விதிமுறைகளுக்கு நேர் மாற்றமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். அல்லாஹ் வலியுறுத்தும் சந்திரனின் படித்தரங்களால் நிறுவப்பட்டுவிட்ட துல்லியமான இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவதிலிருந்து உலக மக்களை முழுமையாக திசைதிருப்பி விட்டனர். அல்லாஹ் இந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியைத் துல்லியமானதாகவும், தவறுகளிலிருந்து அப்பாற்பட்டதாகவும் பாதுகாத்துள்ளான் அல்ஹம்துலில்லாஹ். எனவே நாம் விளக்கியுள்ள அனைத்து விஷயங்களை நடுநிலையோடு சிந்தித்து இப்புத்தகத்தை இறுதிவரை படித்தறிய வேண்டுகிறோம்.

 

 





 

 


 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 



நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in


 

 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved